கடற்படை தளபதி தென் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் நேற்று பெப்ரவரி 20 ஆம் திகதி தென் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார். அங்கு தென் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா அவர்களினால் கடற்படை தளபதி அவர்களை உற்சாகமாக வரவேற்கப்பட்டுள்ளது.

கடற்படை தளபதியவர்கள் முதலில் இலங்கை கடற்படை கப்பல் மஹானாக நிருவனத்தில் அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் உறையாடினார். அதன் பின் தென் கிழக்கு கடற்படை கட்டளையின் செயல்பணி பற்றி கடற்படை தளபதியவர்களை விழிப்புணர்வு செய்யும் திட்டமொன்று கட்டளை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மேலும் கட்டளை நடவடிக்கைகள் அறையில் கண்கானிப்பு விஜயமொன்றை மேற்கொன்டுள்ள இவர் மரக்கன்று ஒன்றை நடவு செய்துள்ளார்.

அதன் பின் சங்கமன்கிராமம் கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள ராடார் நிலையத்தின் கண்கானிப்பு விஜயமொன்றை மேற்கொன்டுள்ள இவர் அங்கு மரக்கன்று ஒன்றை நடவு செய்துள்ளார். சங்கமன்கிராமம் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தின் மிக குறுகிய காலத்தில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்றை கடற்படைத் தளபதியவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அங்கு அவர் அப் பகுதியில் பொதுமக்களுடன் ஒரு நட்பு கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

மெலும், கடற்படை தளபதி அவர்கள் ஒலுவில் துறைமுக வழாவில் கண்கானிப்பு விஜயமொன்றை மேற்கொன்டுள்ள பின் இலங்கை கடற்படை கப்பல் மஹானாக நிருவனத்தில் ராடார் நிலையமாக பராமரிக்கப்படுகின்ற கல்முனை கடற்படை முகாமிலும் கண்கானிப்பு விஜயமொன்றை மேற்கொன்டுள்ளார். அங்கு விஜயத்தை நினைவில் கொள்வதுக்காக மாம் மரக்கன்று ஒன்றை நடவு செய்துள்ளார். குறித்த விஜயத்தின் கடைசியாக இவர் உகந்தை, முருகன் ஆழயத்திற்கு விஜயம் செய்தார்.

மேலும் இன் நிகழ்வுகளில் தென் கிழக்கு கடற்படைக் கட்டளையின் அனைத்து கடற்படை பிரதானிகள் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் மஹானாக நிருவனத்தில் கட்டளை அதிகாரியும் கழந்துகொன்டுள்ளனர்.


Inspection visit to SLNS Mahanaga


Inspection visit to Naval Detachment Sangamangramam


Inspection visit to Naval Detachment Kalmunai and Oluvil


Worship to the Mugugan temple at Okanda