கடற்படை மற்றொரு சமுக நலத் திட்டத்தின் பங்களிப்பு

இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத் திட்டங்களின் மற்றொமொரு சமூக நலத் திட்டமாக மன்னார் பகுதியில் அமைந்துள்ள தலைமன்னார் துறை புகையிரத நிலயைத்தில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை செல்கின்ற ரயில்கள் சுத்தம் செய்யும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

அதன் படி வட மத்திய கடற்படைக் கட்டளையின் கடற்படையினர்களினால் இன்று (பெப்ருவரி 23) காலையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப் பணிக்காக 05 கடற்படை அதிகாரிகள் உட்பட 100 கடற்படையினர்கள் கழந்துகொன்டனர்.மேலும் இதுக்காக தலைமன்னார் துறை புகையிரத நிலயைத்தில் ஊழியர் பணியாளர்களும் கழந்துகொன்டனர்.

இப் பணியின் கழந்துகொன்ட வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் உட்பட முழு கடற்படைக்கும் ரயில் ஊழியர்கள் மற்றும் பயணிகள் நண்றி தெரிவித்தனர். எதிர்காலத்திலும் இவ்வாரு பல சமூக சேவைகள் கடற்படையினரினால் மேற்கொள்ளப்படும்.