சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரினால் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினராள் நேற்று (பெப்ரவரி 22) பல்லியவாசலபாடு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது டிராக்டர் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) கைது செய்யப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து ஒரு டிராக்டர் மற்றும் 1800 அடி நீண்ட கயிறு கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்கள் சின்னப்பாடு மற்றும்கொக்கன் தீவு பகுதிகளில் வசிக்கின்ற 57 மற்றும் 42 வயதானவர்களாக அடயாலம் கானப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட குறித்த நபர்கள், டிராக்டர் மற்றும் 1800 அடி நீண்ட கயிறு பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் புத்தலம் மீன்வள பணிப்பாளர் அலுவலகம் மேற்கொள்கின்றது.

மேலும், கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (பெப்ரவரி 22) மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதன நடவடிக்கையின் போது 02 சட்டவிரோத மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டன. குறித்த தடைசெய்யப்பட்ட வலைகள் பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் மட்டக்களப்பு உதவி மீன்வள பணிப்பாளர் அலுவலகம் மேற்கொள்கின்றது.