சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் கற்பிட்டி போலீஸ் அதிகாரிகள் இனைந்து நேற்று (பிப்ரவரி 23) கற்பிட்டி பசார் வீதியில் வைத்து விற்பனைக்கு தயாராக உள்ள 800 சட்டவிரோத சிகரெட் பாக்கெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

குறித்த சந்தேகநபர் கற்பிட்டி பகுதியில் வசிக்கும் 23 வயதாவராக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட குறித்த நபர் மற்றும் சட்டவிரோத சிகரெட் பாக்கெட்டுகள் மேலதிக விசாரணைக்காக கற்பிட்டி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.