கடலாமை முட்டைகள் 60 வுடன் ஒருவர் கைது

கடற்படை வழங்கிய தகவலின் படி கந்தர பொலிஸ் அதிகாரிகளினால் நேற்று (பிப்ரவரி 23) தேவுந்தர, வெல்லமடம பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 60 கடலாமை முட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் முட்டைகள் எடுத்து செல்லும் போது இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர் மாத்தறை பகுதியில் வசிக்கும் 50 வயதாவராக அடையாளம் காணப்பட்டுள்ளது. சந்தேகநபர் மற்றும் கடலாமை முட்டைகள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கந்தர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.