வங்காளம் கடற்படையின் “தலேஷ்வரி ” எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு வங்காளம் கடற்படையின் கடற்படை பிரிவின் “தலேஷ்வரி ” எனும் கப்பல் இன்று (மார்ச் 03) கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது. வருகைத்தந்த குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்துக்காக வருகைதந்த இக்கப்பலில் சிப்பந்திகள் இலங்கையில் தரித்திருக்கும் வேளையில் இலங்கையின் முக்கிய இடங்களை பார்வையிட மற்றும் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

81 மீட்டர் நீளம் கொண்ட “தலேஷ்வரி ” எனும் கப்பல் 183 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ளதுடன், இக்கப்பல் மார்ச், 06 ஆம் திகதி நாட்டைவிட்டு புறப்பட உள்ளது.