இலங்கையில் சீன மக்கள் குடியரசின் தூதர் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதிவுடன் சந்திப்பு

இலங்கையில் சீன மக்கள் குடியரசின் தூதர் அதிமேதகு சேன்க் சுயுவான் (Cheng Xueyuan) அவர்கள் உட்பட பிரதிநிதி குழு நேற்று (மார்ச் 06) வட மத்திய கடற்படை கட்டளையின் விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர். அங்கு அவர்களை கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி ரியர் அட்மிரல் முதித கமகே அவர்களினால் அன்பாக வரவேற்கப்பட்டது.

அதன் பின் இவர்களுக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னமும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. மேலும் இவர் தலைமன்னார் கடற்படை முகாமில் அமைந்துள்ள பழைய ரயில்பாதை மற்றும் கலங்கரை விளக்கம் பார்வையிட இது ஒரு வாய்ப்பாக கொன்டுள்ளார்.