இலங்கை இந்திய நட்பு மேம்படுத்தி கச்சத்தீவு திருவிழா இன்று கோலாகலமாக நிறைவு

இலங்கை மற்றும் இந்திய கத்தோலிக்க பக்தர்கள் மிகுந்த மரியாதை மற்றும் பக்தியுடன் பூஜை வழிபாடுகள் செய்யும் இலங்கை கடல் பகுதியில் அமைந்துள்ள கச்சத்தீவு ஆலயத்தில் வருடாந்த திருவிழா இன்று (மார்ச் 16) காலை மிக சிறப்பாக நிறைவடைந்தது. கடற்படை மூலம் புதிய ஆலயம். நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் மூன்றாவது திருவிழா இதுவாகும். இம் முரையும் இந்த நடவடிக்கைகளுக்காக யாழ். மறை மாவட்ட குருமுதல்வருக்கு மற்றும் மாவட்ட செயலாளருக்கு தேவையான வசதிகல் கடற்படை மூலம் வழங்கப்பட்டது.

சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் ஆராதனைகள் இடம்பெற்றதுடன் திருவிழாவின் தமிழ் திருப்பலியை, இந்தியாவில் ஜோசப் லுதுருராஜ அருட்தந்தை மூலமும் சிங்கல மொழி திருப்பலியை ரொபின்சன் விஜேசிங்க அவர்களால் நடத்தப்பட்டுள்ளன. இவ் ஆராதனை நிகழ்வில், யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜச்டின் ஞானபிரகாசம் அருட்தந்தை, யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்திய கவுன்சிலர் ஜெனரல் எஸ் பாலசந்திரன், படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா, வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க உட்பட சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் முப்படையினர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இலங்கையிலிருந்து சுமார் 6500 பக்தர்களும் இந்தியாவிலிருந்து சுமார் 2100 பக்தர்களும் கழந்துகொன்டனர்.

அதன் படி கடற்படை மூலம் கச்சத்தீவு திருவிழாவின் கழந்து கொல்லும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், சுகாதார வசதிகள், தற்காலிக படகுத்துறைகள், பாதைகள் மற்றும் மின்சார வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்புக்காக மீட்புக் குழுக்களும் மருத்துவ வசதிகள் வழங்க ஒரு மருத்துவ அதிகாரி உட்பட குழு ஒன்றும் நடவடிக்கைகளிள் ஈடுபடுகின்றன. கடற்படை பங்களிப்புடன் கட்டப்பட்ட கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் சுற்றியுள்ள பகுதி மற்றும் தெருக்களை சுத்தம் செய்வதுக்காக பிரதேச செயலாளர் (நெடுந்தீவு) க்கு தேவையான ஆதரவு கடற்படையினரினால் வழங்கப்பட்டுள்ளன.

அதன் படி கங்கசந்துரை மற்றும் குரிகட்டுவான் ஜெட்டியில் இருந்து கச்சத்தீவு வரை குருக்கள், அரசாங்க அதிகாரிகள், சிறப்பு நபர்கள், பக்தர்கள், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் பூஜைக்கு தேவையான பல பொருட்கள், உபகரணங்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்ல ஒரு சிறப்புத் திட்டமொன்றை கடற்படை மூலம் மேற்கொள்ளப்பட்டது.