2.12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் வழங்கிய தகவலின் படி தென் கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மற்றும் அருகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், அருகம்பே போதை மருந்து தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் இணைந்து இன்று (மார்ச் 16) பொத்துவில், கொட்டுயாலே பகுதியில் வைத்து 2.12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டது. குறித்த கஞ்சா பொதி வீட்டில் விற்பனைக்கு தயாராக இருக்கும் போது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்கள் பொத்துவில் பகுதிகளில் வசிக்கின்ற 39 மற்றும் 61 வயதானவர்களாக அடயாலம் கானப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதி மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பாக பொத்துவில் பொலிஸால் மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி, இந்த ஆண்டுக்குள் மட்டும் கடற்படை நடவடிக்கைகள் மூலம் 680 கிலோ கிராம் கேரள கஞ்சா கைது செய்யப்பட்டது.

மேலும் இந்த பகுதியில் கடந்த சில நாட்களில் தனிநபர்களினால் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் டிராக்டர்கள் மூலம் வலைகள் பயன்படுத்தி மீன்பிடிப்பதை கண்கானித்துள்ளனர். இந்த சூழ்நிலையை கட்டுபடுத்த கடற்படை தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் விளைவாக கடந்த மார்ச் 13 ஆம் திகதி மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது உரிமை அட்டைகள் இல்லாமல் வலைகள் இழுக்க பயன்படுத்திய டிராக்டரொன்றும் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

கடற்படை இலங்கை சுற்றி உள்ள கடலில் மற்றும் கடலோரப் பகுதி முழுவதும் மேற்கொள்கின்ற ரோந்து நடவடிக்கைகள் காரணத்தினால் கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாரான சட்டவிரோத நடவடிக்கைகள் வெற்றிகரமாக தடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.