‘திரிபீடகாபிவந்தனா’ வாரத்துக்கு இனையாக கடற்படை மூலம் பல நிகழ்ச்சித்திட்டங்கள்

புனித திரிபீடகத்தை உலக மரபுரிமையாக அறிவித்து, பாதுகாப்பதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கமைய இன்று (16) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை “திரிபீடகாபிவந்தனா” வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

“திரிபீடகாபிவந்தனா” வாரத்துக்கு இனையாக கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவின் வழிமுறைகள் படி கடற்படையின் அனைத்து கட்டளைகளிலும் தளபதிகளின் முழு மேற்பார்வையின் கீழ் அனைத்து நிருவனங்கள்,கப்பல்களின் மற்றும் கப்பல்கள் குறிப்பாக கொன்டு பல மத நிகழ்வுகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் படி அனைத்து நிருவனங்கில் மற்றும் கப்பல்களின் ஒலி பூஜைகள், அலோக பூஜை மற்றும் முகாம்களின் வளாகத்தை பெளத்த கொடிகளினால் அலங்கரித்தல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. வரும் மார்ச் 22 ஆம் திகதி “திரிபீடகாபிவந்தனா” உறுதிமொழியை வாசிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அதன் படி இன்று (மார்ச் 17) மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான ஏ 521 கப்பலில் கடற்படைத் தளபதியின் தலைமையில் பல மத திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் அங்கு தர்ம சொற்பொழிவு, ஆசிர்வதிக்கப்பட்ட பிரித், அன்னதானம், பிரிகர பூஜை இடம்பெற்றது.

இன் நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளைகளுக்கு சொந்தமான கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் மற்றும் ஏ 521 கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் பிரியந்த பிரநான்து உட்பட கடற்படை சிரேஷ்ட அதிகாரிகள் , இளநிலை அதிகாரிகள்.வீர்ர்கள் கழந்துகொன்டனர்.