327 கிலோ 160 கிராம் புகையிலை கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் மேலும் இன்று (மார்ச் 21) காலை தலைமன்னார் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது 327 கிலோ 160 கிராம் எடை கொன்ட 04 புகையிலை பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட புகையிலை பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம், சுங்க அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.

மேலும் முந்தைய நாள் (மார்ச் 20) இரவு மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது 912 கிலோ 460 கிராம் புகையிலையுடன் கைது செய்யப்பட்ட நபர்களால் இந்த புகையிலை பொதிகளும் கொன்டுவரப்பட்டதாக சந்தேகப்படுகின்றது.

அதன் படி மார்ச் 20 மற்றும் 21 இரண்டு நாட்களில் 1239 கிலோ 62 கிராம் புகையிலை கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன