‘திரிபீடகாபிவந்தனா’ வாரத்துக்கு இனையாக கடற்படை தலைமையகத்தில் தர்ம சொற்பொழிவு நிகழ்ச்சித்திட்டம்

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் கருத்தின் படி புனித திரிபீடகத்தை உலக மரபுரிமையாக அறிவிக்கப்படுள்ளதுடன் இதுக்கு இனையாக ஜனாதிபதி செயலகம் மூலம் 2019 மார்ச் 16 ஆம் திகதி முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை “திரிபீடகாபிவந்தனா” வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

“திரிபீடகாபிவந்தனா” வாரத்துக்கு இனையாக கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவின் வழிமுறைகள் படி கடற்படையின் அனைத்து கட்டளைகளிலும் தளபதிகளின் முழு மேற்பார்வையின் கீழ் அனைத்து நிருவனங்கள்,கப்பல்களின் மற்றும் கப்பல்கள் குறிப்பாக கொன்டு பல மத நிகழ்வுகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் படி இன்று (மார்ச் 22) கடற்படை தளபதியின் தலைமையில் கடற்படை தலைமையகத்தில் சோமதிலக திஸாநாயக்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன. அதன் பிரகு திரிபீடகத்தின் மகிமை பற்றியும் ஆன்மீகத்துடன் கூடிய சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் பௌத்த தத்துவம் பற்றியும் தெளிவூட்டும் நிகழ்ச்சியொன்றும் இங்கு நடாத்தப்பட்டன.

இன் நிகழ்வுக்காக கடற்படை தலைமையகத்தில் பல சிரேஷ்ட அதிகாரிகள் , இளநிலை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கழந்துகொன்டனர்.