மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்த சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மார்ச் 24) மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 150 அடி நீளமான சட்டவிரோத மீன்பிடி வலைகள் 21 கைப்பற்றப்பட்டன.

குறித்த தடைசெய்யப்பட்ட வலைகள் பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் மட்டக்களப்பு உதவி மீன்வள பணிப்பாளர் அலுவலகம் மேற்கொள்கின்றது.