வத்தளை ஆடை கடையில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்தும் பணியில் கடற்படையினர்

வத்தளை ஆடை கடையில் இடம்பெற்ற தீ அனர்த்தம் இலங்கை கடற்படையினர் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தனர். ஏற்பட்ட தீ அனர்த்தம் பற்றி இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படை கட்டளைக்கு தகவல் அறிவிக்கப்பட்ட பின் குறித்த கட்டளையின் வீர்ர்களிலால் இத்தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இத்தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் இருந்து 10 கடற்படையினருடன் ஒரு தீ அனைப்பு வாகனம், இரண்டு தண்ணீர் பவுசர்களும் இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிருவனத்தில் இருந்து 10 கடற்படையிர், ஒரு தீ அனைப்பு வாகனம், ஒரு தண்ணீர் பவுசரும் கழந்துகொன்டன. குறித்த பகுதியில் இலங்கை கடற்படையினர் விமானப்படை மற்றும் கொழும்பு துறைமுகத்தில் தீயணைப்பு படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் காரணமாக தீ மேலும் பரவாது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின் கொழும்பு மாநகர சபையின் தீ அனைப்பு பிரிவுடன் இனைந்து இலங்கை கடற்படையினரினால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் காரணமாக ஆடை கடையில் இடம்பெற்ற தீ அனர்த்தம் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.