சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கடற்படையினரினால் வழங்கப்பட்ட தகவலின் படி காலி போலீஸ் அதிகாரிகளுடன் இனைந்து இன்று (மார்ச் 25) காலி நகரத்தில் வைத்து 560 சட்டவிரோத சிகரெட் பாக்கெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

குறித்த சந்தேகநபர் பதுளை பகுதியில் வசிக்கும் 51 வயதாவராக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட குறித்த நபர் மற்றும் சட்டவிரோத சிகரெட் பாக்கெட்டுகள் மேலதிக விசாரணைக்காக காலி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.