இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் எல்லை மீறி அனலதீவுக்கு வட மேற்கு பகுதி கடலில் மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் மற்றும் அவர்களின் மூன்று (03) படகுகள் நேற்று (மார்ச் 25) இரவு வடக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டன.

அதன் படி கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் மற்றும் படகுகள், இலங்கை கடற்படை கப்பல் “எலார” நிருவனத்துக்கு கொன்டுவந்து மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

மேலும், கடற்படையினரினால் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற செயல்பாடுகள் காரணமாக கடந்த மார்ச் 23 ஆம் திகதி இவ்வாரு இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேருடன் 02 படகுகள் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன