ஆஸ்திரேலிய கடற்படையினரினால் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

இந்திய பசிபிக் ஒற்றுமை 2019 திட்டத்துக்கு கழந்துகொள்ள கடந்த மார்ச் 23 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ள ஆஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான சக்சஸ் கப்பலின் பணியாளர்களினால் (மார்ச் 26) திருகோணமலை ரவுன்ட் பே கடற்கரை சுத்தம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

இன் நிகழ்வுக்காக சக்சஸ் கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் டிரகன் ஜி க்ரோகன் அவர்கள் உட்பட 19 கடற்படையினர் கழந்துகொன்டனர். அதே போன்ற இலங்கை கடற்படையின் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க, இலங்கை கடற்படை கப்பல் திஸ்ஸ நிருவனத்தின் கட்டளை அதிகாரி உட்பட 51 கடற்படையினர்கள் கழந்துக்கொள்ளதுடன் குறித்த நடவடிக்கை இப் பகுதி மக்களினால் பாராட்டப்பட்டன.