சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கடற்படையினரால் கைது

கல்பிட்டி பிரதேசத்தில் உள்ள எருமதீவு கடல் பகுதியில் வழக்கமான வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படை வீரர்கள் ஒரு குழு மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 28, 30 மற்றும் 37 வயதுடைய கல்பிட்டி வசித்தவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர். அங்கு டிங்கி 01 ,மோட்டார் 01, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் 10, 02 ஜோடி டைவிங் ஃபின்ஸ் மற்றும் 03 டைவிங் முகமூடிகள் ஆகியவை மீனவர்களுடன் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர்களும் அவர்களின் உடமைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கடற்றொழிலாளர் மீன்வளத் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.