கடற்டையினரால் வெடிபொருட்ளை பயன்படுத்தி மீன் பிடித்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படை வீரர்கள் ஒரு குழு நேற்று (மார்ச் 26) திருகோணமலை மொஹோத்வூரம் பொதுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தேடலின் போது (டய்னமைட்) வெடிபொருளை உபயோகித்து பிடித்து 80 கிலோ மீன்களுடன் ஒருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டபோது, ஒரு மீன் வண்டியில் ஏற்றிச் செல்ல தயாராக இருந்தார் என தெரியவநடதுள்ளது. சந்தேகநபர் 28 வயதுடைய ஈச்சலம்பத்து வசிப்பிடமாக உள்ளவர் ஆகும். சந்தேகநபர் மற்றும் மோட்டார் வண்டியும் மீன்வகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மீன்பிடி ஆய்வாளர் அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.

இந்த ஆண்டு கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடிப்பு நடவடிக்கைகளுக்காக வெடிகுண்டுகளை வர்த்தகம் செய்யும் பல விநியோகஸ்தர்களை கைது செய்ய முடிந்ததுடன் இந்த சட்டவிரோத மீன்பிடி நடைமுறையில் சுற்றியுள்ள கடல்வழங்கள் மிகவும் அழிவடைகின்றது. எனவே இலங்கை கடற்படையினர் தீவு முழுவதும் கடலில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மற்றும் அத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை எப்பொழுதும் தடுத்து நிறுத்த விழிப்புடன் உள்ளது.