இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிருவனத்தில் அமைந்துள்ள கடற்படை மருத்துவமனை கடற்படை வைத்தியசாலை ( தென் கிழக்கு) என்று பெயரிடப்பட்டுள்ளது

தென் கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிருவனத்தில் அமைந்துள்ள கடற்படை மருத்துவமனை புதுபிக்கப்பட்ட பின் தென் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நொயெல் கலுபோவில அவர்களினால் கடற்படை வைத்தியசாலை (தென் கிழக்கு) என்றாக இன்று (ஏப்ரில் 01) பெயரிடப்பட்டுள்ளது. தென் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியவர்களினால் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களுக்கு கூறிய கோரிக்கை மீது குறித்த மருத்துவமனை கடற்படை வைத்தியசாலை ( தென் கிழக்கு) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இங்கு தென் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி கட்டளையின் மருந்துவ அதிகாரிகளை மற்றும் கடற்படையினர்களை உறையாடினார். மேலும் இங்கு உறையாடிய கட்டளை தளபதி மருத்துவ ஊழியர்கள் பாராட்டியதுடன் இந்த மருத்துவமனை இந்த சூழ்நிலைக்கு கொன்டுவர பங்களித்த கடற்படைத் தளபதி, பணிப்பாளர் நாயகம், மருத்துவ சேவைகள், முன்னால் தென் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ஆகியோருக்கு தனது நண்றியை வழங்கினார்.

இன் நிகழ்வுக்காக தென் கிழக்கு கடற்படைக் கட்டளையின் துனை தளபதி கொமடோர் பிரசந்ந ஹேவகே, இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் நிஷாந்த ரனவீர, டாக்டர் லெப்டினென்ட் கமாண்டர் நிர்மல விக்ரமசிங்க உட்பட தென் கிழக்கு கடற்படை கட்டளையின் பல அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கழந்துகொன்டனர்.