ரஷிய கடற்படையின் “அட்மிரல் ஒப் த ப்லீட் ஒப் த ஸொவியட் யுனியன் கோஷ்கோ” கப்பல் இலங்கை வருகை

ரஷிய கடற்படைக்குச் சொந்தமான "அட்மிரல் ஒப் த ப்லீட் ஒப் த ஸொவியட் யுனியன் கோஷ்கோ" எனும் கடற்படை கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (ஏப்ரல், 03) இலங்கையை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரித்தானிய கடற்படை கப்பலை கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

கப்பல் துறைமுகத்துக்கு வந்தடைந்த பின் கப்பலின் கட்டளை அதிகாரியான கேப்டன் மிகொலொச்சி க்ரோக்மல் இன்று மேற்கு கடற்படை கட்டளையின் தளபதியவர்களை சந்திக்க உள்ளார்.

136 மீட்டர் நீளமான "மொன்ட்ரோஸ்" கப்பலில் 236 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ளது. புதன்கிழமை நாட்டை விட்டு புறப்பட்டு செல்லவுள்ள இக் கப்பலின் கடற்படை சிப்பாய்கள், புறப்படுவதற்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

அதன் படி விஜயத்தின் பின் (ஏப்ரல் 06) ஆம் திகதி குறித்த கப்பல் நாட்டை விட்டு புறப்பட உள்ளது.