பாக்கிஸ்தான் கடற்படை பணியாளர்கள் பயிற்சி பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை

பாகிஸ்தான் கடற்படை பணியாளர்கள் பயிற்சியின் பிரதிநிதிகள் சிலர் கடந்த ஏப்ரல் 07 முதல் 11 ஆம் திகதி வரை இலங்கைக்கு கல்விச்சுற்றுலாவாக விஜயம் செய்தனர். அதனடிப்படையில் குழுவின் பிரதான அலுவலரான ரியர் அட்மிரல் நவீட் ஏ ரிஸ்வி உட்பட பல பிரதிநிதிகள் கடந்த நாட்களில் கல்வி முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்களில் சுற்றுப்பயணம் சென்றதுடன் 08 ஏப்ரல் கடற்படை தலைமையகத்தில் கடற்படை தலைமை அலுவலகர், ரியர் அட்மிரல் ஜகத் ரணசிங்கவை சந்தித்தனர்.

பிரதிநிதிகள் குழு இலங்கை பாதுகாப்பு தலைமை அலுவலகர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ண அவர்களை உட்பட பாக்கிஸ்தான் உயர் ஆணையாலர், அதிமேதகு ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் அவர்களையும் சந்தித்துடன் பயிற்சியின் பிரதிநிதிகள் மூலம் கல்வி பற்றிய விடயங்கள் அவர்களுக்கு விளக்கப்பட்டது. அதன் பின்னர், படலந்தவில் பாதுகாப்புக் கட்டளை ஆணை மற்றும் பணியாளர் கல்லூரி குழு மேற்கொண்ட விஜயத்தின் பிரதிநிதிகள் அங்கு தமது கற்கை நெறி தொடர்பாக அறிவைப் பெரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இன்னும், ஏப்ரல் 09 அன்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கா மற்றும்த விமானப்படை தலைமை அலுவலகர் ஏயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அதிகாரியை சந்தித்ததுடன், அங்கு அவர்கள் பரஸ்பர நலன்களைப் பற்றிய விவாதங்களை நடத்தியதுடன், அந்த சந்தர்ப்பங்களின் முக்கியத்துவத்தை குறிக்க மெமோக்களை பரிமாறினர்.

இறுதியாக, கட்நத ஏப்ரல் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் குழுத்தலைவர் ரியர் அட்மிரல் நவீத் ரிஸ்வி உட்பட பிரதிநிதிகள் தெற்கு மற்றும் கிழக்கு கடற்படைக் கட்டளைகளை பார்வையிட சென்றதுடன். ஒவ்வொரு கட்டளையிலும் பணிபுரியும் அந்தந்த பகுதி தளபதிகள் மூலம் பிரதிநிதிகளுக் பொறுப்புகள் பற்றி விளக்கப்பட்டது. இந்த சம்பவங்களை குறிப்பிடுவதற்கு மெமொக்கள் பரிமாறப்பட்டன.

இலங்கையில் பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆணையாளர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் சஜாத் அலி இந்த சந்திப்பில் கலந்து கொண்டார். பாக்கிஸ்தான் கடற்படை பயிற்சிப் பிரிவின் பிரதிநிதிகள், அவர்களது ஆய்வு சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி, நேற்று (11 ஏப்ரல்) இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர்.