சட்டவிரோதமாக சங்கு சிப்பிகள் கடத்தி சென்ற ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் மற்றும் சிலாவதுர பொலிஸார் இனைந்து இன்று (ஏப்ரில் 18) சட்டவிரோதமாக சங்கு சிப்பிகள் கடத்தி சென்ற ஒருவரை கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் சிலாவதுர பொலிஸார் இனைந்து சிலாவதுர கொக்குபடயான் பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றிவலைப்பின் போது பொலெரோ வகையில் கேப் வண்டியொன்று மூலம் கடத்தி சென்ற 349 சங்கு சிப்பிகளுடன் ஒருவரை கைது செய்யப்பட்டன. குறித்த சந்தேகநபர் புத்தலம், கரம்ப பகுதியில் வசிக்கின்ற 28 வயதாவராக அடையாளம் காணப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட குறித்த நபர் மற்றும் சட்டவிரோத சங்கு சிப்பிகள் மேலதிக விசாரணைக்காக சிலாவதுர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.