நீரில் மூழ்கிய இளைஞரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது

கலபட நீர்வீழ்ச்சிக்கு விழுந்து நீரில் மூழ்கிய இளைஞரின் உடலை இன்று (ஏப்ரில் 19) கடற்படை கண்டுடபிடித்துள்ளது

நாவலப்பிட்டி பிரதேசத்தில் கலபட நீர்வீழ்ச்சி பார்வையிட்ட வந்த ஒரு இளைஞர் விழுந்து நீரில் மூழ்கிய பின்னர் காணவில்லை என நாவலப்பிட்டி பொலிஸிடமிருந்து கடற்படைத் தலைமையகத்திற்கு தகவல் கிடைத்தபோது, (ஏப்ரல் 18) மேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட 06 கடற்படை வீரர்களின் ஒரு நீர் முழ்கி குழு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு கடுமையான முயற்சியின் பின்னர் கடற்படையினர் நீரில் மூழ்கிய சிறுவனின் உடலை கண்டுபிடித்துள்ளனர்.

இறந்த இளைஞன் கம்பொலைபிரதேசத்தில் வசிக்கும் 19 வயது ஆண் ஆவதுடன் இளைஞரின் பூத உடல் மேலதிக நடவடிக்கைகளுக்கு நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கையழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.