இலங்கை கடற்படை கப்பல் ரனவிக்ரமவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ருவன் எதிரிசிங்க கடமையேற்பு

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான ரனவிக்ரம கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ருவன் எதிரிசிங்க (திசைகாட்டி) அவர்கள் இந்று (ஏப்ரில் 19) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

அதன் பிரகாரமாக கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கொமான்டர் ஆனந்த திஸாநாயக்க (ஆயுதங்கள்) அவர்களால் திருகோணமலை கடற்படை பட்டரையில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக கடற்படை கொடி கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஆனந்த குருகே அவர்கள் கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.