கிரகோரி குளத்தில் விபத்தான 'ஜெட் ஸ்கை' படகில் இருந்த இருவர் கடற்படையினரினால் மீட்பு

நுவரலியா கிரகோரி குளத்தில் 'ஜெட் ஸ்கை நீர் விளையாட்டில் ஈடுபட்டுருக்கும் போது விபத்தான இருவர் இன்று (ஏப்ரில் 19) கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த வசந்த காலத்தில் நுவரெலியா பிரதேசத்திற்கு விஜயம் செய்த இந்த இரு நபர்களும் நுவரலியா கிரகோரி குளத்தில் 'ஜெட் ஸ்கை நீர் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குறித்த படகின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் படகு விபத்தானது. அங்கு அவர்களை கண்கானித்த கிரகோரி குளத்தில் உயிர்மீட்பு கடமையில் ஈடுபடுகின்ற இலங்கை கடற்படை துரித இயக்க மீட்பு மற்றும் நிவாரனப் பிரிவில் (4RU) இணைப்புப் பெற்ற கடற்படை வீரர்களால் மீட்கப்பட்டது.

இவ்வாரு மீட்கப்பட்ட நபர்கள் 28 மற்றும் 21 வயதான பதுளை, தெமோதர பகுதியில் வசிப்பவர்களாக குறிப்பிடத்தக்கது.