பாணம களப்பு பகுதியில் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த பெண்னின் உயிரை கடற்படை காப்பாற்றியது

பாணம களப்பு பகுதியில் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த பெண்னின் உயிரை நேற்று (ஏப்ரில் 19) கடற்படையினரினால் காப்பாற்றப்பட்டன.

பாணம பிரதேசத்திற்கு சுற்றுலா பயனமொன்றை வந்துள்ள குறித்த பெண் பாணம களப்பு பகுதியில் குளிக்கும் போது நீரில் மூழ்கிக் கொள்வதை கண்கானித்த பாணம கடற்கரையில் உயிர்மீட்பு கடமையில் ஈடுபடுகின்ற இலங்கை கடற்படை துரித இயக்க மீட்பு மற்றும் நிவாரனப் பிரிவில் (4RU) இணைப்புப் பெற்ற கடற்படை வீரர்களால் மீட்கப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவ்வாரு மீட்கப்பட்ட பெண் பொத்துவில் பகுதியில் வசிக்கின்ற 18 வயதானவராக குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்று நுவரலியா கிரகோரி குளத்தில் 'ஜெட் ஸ்கை நீர் விளையாட்டில் ஈடுபட்டுருக்கும் போது விபத்தான இருவரை கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளது. இந்த புத்தாண்டு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயனங்களில் ஈடுபடும் நபர்கள் பல்வேறு ஆபத்தான இடங்களில் குளிப்பதினால் மரண ஆபத்து அதிகபட்டுள்ளதுடன் உயிர்மீட்பு குழுக்கள் இருக்கின்ற பாதுகாப்பான இடங்களை குளிப்பதற்கு பயன்படுத்துமாரு பொதுமக்களிடம் நாங்கள் கேட்கிறோம்.