கடற்படையினரினால் கைது செய்யப்பட்ட ஹெரோயின் பொதி மற்றும் மீன்பிடி படகு கரைக்கு கொண்டு வரப்பட்டன

இலங்கை கடற்படை கப்பல் சாகர’வின் கடற்படையினர்களினால் நேற்று (ஏப்ரல் 22) மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட ஹெரோயின் பொதி உட்பட ஐந்து பேர் இன்று (ஏப்ரல் 23) காலையில் திருகோணமலை கடற்படை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டன.

சட்டவிரோதமான போதைப்பொருற்கள் பொதியொன்று இந்த நாட்டுக்கு கொண்டு வர முயற்சிக்கின்றதாக அரச புலனாய்வு சேவை மற்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இனைந்து வழங்கப்பட்ட தகவலின் படி உடனடியாக இயக்கப்பட்ட கடற்படையினர் இலங்கைக்கு வடகிழக்கு கடலில் சுமார் 274 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி செள்கின்ற இலங்கைக்கு சொந்தமான பல நாள் மீன்பிடி படகொன்றுடன் 05 பேர் கைது செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட குறித்த போதைப்பொருற்கள் அவர்கள் கடல் வழியாக கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகிக்கப்படுகிறது. குறித்த சந்தேகநபர்கள் மதுரங்குலிய மற்றும் யாழ்ப்பாணம் பகுதியில் வசிக்கும் 31,39,40,44 மற்றும் 45 வயதாவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட கப்பல், சந்தேகநபர்கள் மற்றும் ஹெரோயின் பொதி மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.