80 லீட்டர் கள்ளச் சாராயத்துடன் 07 பேர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் ஜின்னபுரம் கடற்கரை பகுதியில் இன்று (ஏப்ரில் 26) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தேசிய கள்ளச் சாராயம் 80 லீட்டருடன் 07 பேர் கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று ஜின்னபுரம் கடற்கரை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கடற்கரையில் மறைக்கப்பட்ட தேசிய கள்ளச் சாராயம் 80 லீட்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு 04 பிளாஸ்டிக் கேன்கள், 02 பீப்பாய்கள் மற்றும் பயன்படுத்திய உபகரணங்களும் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

குறித்த சந்தேகநபர்கள் வக்காரே, லங்காபடுன, மதுரங்குட மற்றும் புல்மோட்டை பகுதியில் வசிக்கின்ற 19,32,57,64,65 மற்றும் 75 வயதானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள், கள்ளச் சாராயம் மற்றும் உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புல்மோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.