சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நாங்கு (04) பேர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் கடந்த ஏப்ரில் 27 ஆம் திகதி புத்தலம் களப்பு பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நாங்கு (04) பேர் கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக வட மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கப்பல்களின் கடற்படையினரினால் புத்தலம் களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது செல்லுப்படியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மற்றும் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன் பிடித்த குற்றத்தினால் குறித்த 04 பேரை இவ்வாரு கைது செய்யப்பட்டன. கைது செய்த நபர்கள் 17.31.53 மற்றும் 54 வயதுடைய கற்பிட்டி பகுதியில் வசிக்கின்றவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர்.

அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய படகுகள், வெழி எரி இயந்திரங்கள், சட்டவிரோதமான வலை மற்றும் மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தலம், மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.