15 பெக்கட் கேரள கஞ்சாவுடன் மூவர் (03) கடற்படையினரினால் கைது

கொழும்பு, கிங்ஸ்பரீ ஹோட்டலின் முன் கடந்த ஏப்ரில் 27 ஆம் திகதி 15 பெக்கட் (கிராம்) கேரள கஞ்சாவுடன் மூவர் (03) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக கொழும்பு பகுதியில் பாதுகாப்புக்காக இனைக்கப்பட்டுருந்த மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 15 கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் (03) கைது செய்யப்பட்டன. குறித்த கேரள கஞ்சா பொதி முச்சக்கர வண்டி உள்ளே மறைத்து வைத்திருக்கும் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்த நபர்கள் 31,43 மற்றும் 64 வயதுடைய கற்பிட்டி பகுதியில் வசிக்கின்றவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள், முச்சக்கர வண்டி மற்றும் கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைளுக்காக கொழும்பு கோட்டை, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.