அனுமதி பத்திரங்கள் இல்லாமல் தேக்கு மரக் கட்டைகள் கடத்திச்சென்ற மூவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் நேற்று (ஏப்ரில் 29) புத்தலம், மதுரகம பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் தேக்கு மரக் கட்டைகள் கடத்திச்சென்ற மூவர் கைது செய்யப்பட்ன.

அதன் பிரகாரமாக அனுமதி பத்திரங்கள் இல்லாமல் தேக்கு மரக் கட்டைகள் கடத்திச்சென்ற குற்றத்தினால் குறித்த மூவரையும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அங்கு இருந்து 06 அடி நீளமான 12 தேக்கு மரக் கட்டைகள், 03 அடி நீளமான 05 தேக்கு மரக் கட்டைகள் மற்றும் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட டீமொ பட்டா லொரி வன்டியும் கைது செய்யப்பட்டன.

கைது செய்த நபர்கள் 41 மற்றும் 44 வயது இடையில் புத்தலம், மதுரகம பகுதியில் வசிக்கின்றவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள், மரக் கட்டைகள் மற்றும் லொரி வன்டி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தலம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.