இலங்கைக்குள் வெடிமருந்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் கடற்படை தளபதி இடையில் சந்திப்பு

இலங்கையில் வெடிமருந்துகள் உற்பத்தி செய்கின்ற மற்றும் விநியோகிக்கின்ற பங்குதாரர்களுடன் ஒரு சந்திப்பு கடற்படை தளபதியின் தலைமையில் கடந்த ஏப்ரில் 29 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தின் உள்ள அட்மிரல் சோமத்தியில திஸாநாயக்க ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

அங்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களினால் வருகை தந்த பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு பற்றி துனை செயலாளர் டக்லஸ் அவர்கள், “கெலனி பயர் வர்க்ஸ்” நிருவனத்தின் அதிகாரிகள், அரசாங்க வெடிமருந்து களஞ்சியசாலை உத்தியோகத்தர்கள், வெடிமருந்து கட்டுப்பாட்டாளர்கள், விநியோகிக்கின்ற பங்குதாரர்கள் உட்பட அனைவரையும் வரவேற்ற பிறகு, இலங்கையின் தற்போதைய சூழலின் கிழ் சட்டவிரோதமாக பயன்படுத்திக்கின்ற வெடிமருந்துகள் மூலம் ஏற்படுகின்ற தவறான விளைவுகளை பற்றி அவர்களுக்கு கூறினார்.

அதன் பிரகாரமாக மேலும் உரையாடிய கடற்படை தளபதி இலங்கைக்குழ் வெடிபொருட்கள் பெறுவதுக்கு முறையான வழிமுறை மூலம் அரசு உரிமம் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு மட்டமே வெலிசறை அரச வெடிமருந்து களஞ்சியசாலை (CEFAP) மூலம் விநியோகிக்கப்படுகின்றதுடன் சில சந்தர்ப்பங்களில் குறித்த உரிமம் பெற்ற வெடிமருந்து விநியோகிக்கின்றவர்கள் மூலம் தெரிந்தோ தெரியாமலோ வெடிமருந்து வெளியாட்களிடம் விநியோகப்படுகின்றது. ஆகையால் பெறுகின்ற வெடிமருந்து சட்டவிரோத மீன்பிடியில் இருந்து மிகவும் பேரழிவு நடவடிக்கைகள் வரை பயன்படுத்தப்படுகின்றதாக கூறினார்.

ஜெலக்னயிட்டுக்கு பதிலாக பயன்படுத்தப்படுகின்ற வோட்டர் ஜேல் எனப் உயர் வெடிமருந்துகள் இவ்வாரு கல் கோரிகளுக்காக உரிமம் பெற்ற கட்டுப்பாட்டாளர்கள் மூலம் விநியோகப்படுகின்றன. கடந்த காலங்களில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக வைத்திருந்த வோட்டர் ஜேல் பெரிய தொகை கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் பிரகாரமாக 2017 ஆண்டில் 59 கிலோகிராம், 2018 ஆண்டில் 94 கிலோகிராம் மற்றும் 2019 ஆண்டில் இது வரை 72 கிலோகிராம் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை குண்டுதாரிகள் தாக்கிய இடங்கள் சோதிக்கும் போது வோட்டர் ஜேல் வெடி பொருட்கள் பெரிய தொகை பாதுகாப்பு படைகள் மற்றும் போலீசார் கைது செய்யப்பட்டன.

சட்டவிரோத முறையில் இவ்வாரு வெடிபொருட்கள் வெளியாட்களுக்கு வழங்குவோர் குறித்து மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க படுவதாக மேலும் வலியுறுத்தப்பட்டது.