எரக்கண்டி பகுதியில் வைத்து வெடி பொருட்கள் பொதியொன்று கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் கடந்த மே 04 எரக்கண்டி பகுதியில் மேற்கொன்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது மறைக்கப்பட்ட வெடிபொருட்கள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் பிரகாரமாக மேற்கொன்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது எரக்கண்டி பகுதியில் மீன் உள்ளிருப்பில் மறைக்கப்பட்ட வெடி பொருட்கள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு 14 வாட்டர் ஜேல் குச்சிகள், 26 மின்சார அல்லாத வெடித்தூண்டிகள் மற்றும் 5.8 நீளமான பாதுகாப்பு வெடி நூலொன்று கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த வெடி பொருட்கள் பொதி குச்சவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும் கடந்த ஏப்ரில் 29 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா தலைமையில் வெடிமருந்து தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது சட்டவிரோதமாக பயன்படுத்திக்கின்ற வெடிமருந்துகள் மூலம் ஏற்படுகின்ற தவறான விளைவுகளை பற்றி அவர்களுக்கு கூறினார்.