இலங்கை கடற்படையினரால் கையேற்கப்பட்ட அமெரிக்க கடலோர பாதுகாப்புப்படை கப்பலான “சேர்மன்” கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இலங்கை கடற்படையினரால் கையேற்கப்பட்ட முன்னாள் அமெரிக்க கடலோர பாதுகாப்புப்படை கப்பலான “சேர்மன்” (USCGC Sherman) இன்று (மே,12)கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

22 கடற்படை அதிகாரிகள் மற்றும் 111 கடற்படை சிப்பாய்கள் ஆகியோருடன் இன்று காலை 1000 மணிக்கு வருகை தந்த இக்கப்பலை வரவேற்பதற்காக இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் வருகை தந்திருந்தார். பின்னர், வருகை தந்த இக்கப்பலினை கடற்படை தளபதி சுற்றிப்பார்வையிட்டார். கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலுக்கு கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்பளிக்கப்பட்டது.

இன் நிகழ்வுக்காக கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் நிராஜ ஆட்டிகல ஆகியோரும் கழந்துகொண்டுள்ளதுடன் மேலும் கடற்படைத் தலைமையகத்தில் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் முத்த அதிகாரிகள் கழந்துகொன்டனர்.

தன்னகத்தே ஆயுத மற்றும் இயந்திர வசதிகளை கொண்டுள்ள 115 மீட்டார் நீளமுடைய இக்கப்பலுக்கு எதிர் வரும் காலங்களில் ஜனாதிபதி அவர்களினால் ஆணையதிகாரம் அளிக்கப்பட்டு வைக்கப்படவுள்ளது. இக்கப்பல் இவ்வாறு இலங்கை கடற்படையில் இணைந்து கொள்ளுமாயின் அதுவே இலங்கை கடற்படையில் இடம்பெறும் மிகப்பெரிய கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிரகாரமாக ஹவாய், ஹொனொலுவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட், 27 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வின்போது அமெரிக்க கடலோர காவல்படை கையகப்படுத்துதல் பிரிவின் துனை தளபதி மற்றும் பிரதான அதிகாரி ரியர் அட்மிரல் ஹேகொக் அவரடகளினால் இலங்கை முன்னால் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களுக்கு உத்தியோகபூர்வமாக இக்கப்பலினை கையேற்றுள்ளது.

இக்கப்பல் மூலம் கடல் பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது உதவிகள் வழங்குதல், மேலும் இலங்கை தீவை சுற்றியுள்ள ஆழ்கடல் பகுதியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகிய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளன.