தலைமன்னார் மணல் பாரையில் சிக்கிய மீன்பிடி படகு பழுதுபார்க்க கடற்படை ஆதரவு

தலைமன்னார் கடல் பகுதியில் உள்ள ஒரு மணல் பாரையில் சிக்கிய மீன்பிடி படகொன்றை பழுதுபார்க்க கடற்படை இன்று (மே 12) ஆதரவு வழங்கியது.

அதன் பிரகாரமாக வட மத்திய கடற்படை கட்டளையின் இனைக்கப்பட்ட பொறியியல் பிரிவின் மற்றும் நீர்முழ்கி பிரிவின் கடற்படையினரினால் இன்று தலைமன்னார் பகுதியில் மணல் பாரை 04 மற்றும் 05 இடையில் சிக்கி பாதிக்கப்பட்ட மீன்பிடி படகொன்றை இவ்வாரு பழுதுபார்க்கப்பட்டன.

மல்ஷானி 2’ எனக் குறிக்கப்படும் மீன்பிடி படகு கடந்த மே 09 ஆம் திகதி கந்தக்குலிய பகுதியில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகாக சென்றுள்ளதுடன் இந்த விபத்து தொடர்பாக தகவல்கள் கிடைத்த பின் கடற்படை படகொன்றுடன் ஒரு நிவாரண குழு இதுக்காக அனுப்பிவைக்கப்பட்டன. அதன் பிரகாரமாக கடற்படை நிவாரண குழு சக்தி வாய்ந்த முயற்சிகளை பயன்படுத்தி மீன்பிடி கப்பலை சரிசெய்ய நடவடிக்கை எடுத்தது

மேலும் இலங்கை சுற்றி உள்ள கடல் பயன்படுத்திகின்ற மீன்பிடி சமுதாயத்திற்கு ஏற்படுகின்ற எந்தவித ஆபத்துக்கும் உதவ கடற்படை தயாராக உள்ளது