வெருகல் ஆறு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 11 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் நேற்று (மே 13) திருகோணமலை வெருகல் ஆறு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 11 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் திருகோணமலை வெருகல் ஆறு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.