இலங்கை கடற்படை கப்பல் சமுதுர சிங்கப்பூருக்கு நெருங்கியது

சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியின் (International Maritime Defence Exhibition – IMDEX) பங்கேற்க சிங்கப்பூருக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் சமுதுர கடந்த மே 12 ஆம் திகதி சிங்கப்பூரில் சாங்கி துறைமுகத்துக்கு சென்றடைந்தது.

அதன் பிரகாரமாக கடந்த மே 06 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை விட்டு புறப்பட்ட இலங்கை கடற்படை கப்பல் சமுதுர கடந்த மே 12 ஆம் திகதி சிங்கப்பூரில் சாங்கி துறைமுகத்துக்கு சென்றடைந்துள்ளதுடன் சிங்கப்பூர் கடற்படையினரினால் கடற்படை மரபுக்களுக்கமைய படி சமுதுர கப்பலை வரவேற்கப்பட்டன. இன் நிகழ்வுக்காக சிங்கப்பூரில் இலங்கையின் நடிப்பு உயர் ஆணையாளர் ஓ.எல் அமிரஜ்வாத் அவர்கள் உட்பட உயர் ஆணையாளர் நிருவனத்தின் உறுப்பினர்கள் கழந்துகொன்டனர்.

குறித்த சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சிக்காக 33 நாடுகள் கழந்துகொள்வதுடன் இதுக்காக 16 கடற்படைத் தளபதிவர்கள், 06 கடலோர பாதுகாப்பு முகமைகளின் அதிகாரிகள் கழந்துகொள்ள உள்ளனர். அங்கு சமிக்ஞைகளை பரிமாற்றம், கொடியேற்பு நடவடிக்கைகள், தீ மற்றும் பேரழிவு மேலாண்மை, அவசர சந்தர்ப்பங்களில் அமைவுறுதல் நடவடிக்கைகள், கப்பல்கள் இடையில் பாதுகாப்பாக தூரம் பராமரிப்பு, கப்பலை இழுத்துக் கொண்டு செல்தல் ஆகிய கடற்படை பயிற்ச்சிகளுக்கு கப்பலின் ஊழியர்கள் கழந்துகொள்ள உள்ளனர்.

அதன் பிரகாரமாக சமுதுர கப்பல் இந்த சர்வதேச கடல்சார் கண்காட்சி மற்றும் பயிற்சி வெற்றிகரமாக நிரைவுசெய்த பின் மே 17 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடையும்.