சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரினால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) நேற்று (மே 15) வெத்தலகேனி கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் வெத்தலகேனி பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் இவ்வாரு நேற்று கைது செய்யப்பட்டன. கைது செய்த நபர்கள் தல்லடி பகுதியில் வசிக்கின்ற 30 மற்றும் 36 வயதானவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர்.அங்கு மீன்பிடிக்கப் பயன்படுத்திய டிங்கி படகு, வெழி எரி இயந்திரம் மற்றும் 03 சட்டவிரோத மீன்பிடி வலைகள், கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள், டிங்கி படகு, வெழி எரி இயந்திரம், சட்டவிரோத மீன்பிடி வலைகள் மற்றும் மற்ற மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.

இந்த சட்டவிரோத மீன்பிடி நடைமுறையில் சுற்றியுள்ள கடல்வழங்கள் மிகவும் அழிவடைகின்றது. எனவே இலங்கை கடற்படையினர் தீவு முழுவதும் கடலில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மற்றும் அத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை எப்பொழுதும் தடுத்து நிறுத்த விழிப்புடன் உள்ளது.