கடற்படையினர் நினைவுகூறும் விழா கடற்படை தளபதி தலைமையில் வெலிசரையில்

தேசிய போர் வீரர்கள் தின கொண்டாட்டங்களுக்கு இணையாக யுத்ததில் உயிர் தியாகம் செய்த கடற்படையினர் நினைவு கூறும் விழா இன்று (மே 19) காலை வெலிசரவுள்ள படையினர் நினைவுச்சின்னம் அருகில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா தலமையில் இடம்பெற்றன.

அங்கு, கடற்படைத் தளபதி அவர்களினால் படையினர் நினைவுச்சின்னத்துக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு 2 நிமிடங்கள் அமைதி கொள்கின்ற வகையில் தங்களது நன்றியை வெளியிடப்பட்டது.

இந் நிகழ்வுக்காக கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரால் நிஷாந்த உலுகேதென்ன, கடற்படை துனை தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரால் நிராஜ ஆட்டிகல ஆகியவர்கள் உட்பட கடற்படைதலைமலமயகத்தில் மற்றும் மேற்குக் கடற்படைகட்டளையின்பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நினைவுகூறும் விழா கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவின் தலமையில் இடம்பெற்றதுடன் கண்டி, மயிலபிட்டிய, படையினர் நினைவுச்சின்னத்துக்கு அருகில் இடம்பெற்ற நினைவுகூறும் விழாவுக்காக முப்படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்பு படைகள் பிரதிநிதித்துவப்படுத்தி பல மூத்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உட்பட யுத்ததில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினர், பொது மக்கள் கழந்து கொன்டனர்.