சட்டவிரோதமாக பறிக்கப்பட்ட கற்றாழை தாவரங்களுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது

கடற்படையினர் மற்றும் பொலிஸார் இனைந்து 2019 மே மாதம் 18 ஆம் திகதி சட்டவிரோதமாக கற்றாழை தாவரங்கள் பறிந்து கொண்டு சென்ற இருவர் (02) கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் வன்காலே பொலிஸார் இனைந்து வன்காலே ஈரநில பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது குறித்த ஈரநில பகுதிக்கு சொந்தமான கற்றாழை தாவரங்கள் பறிந்த இருவர் (02) கைது செய்யப்பட்டன. அங்கு 18 பொதிகளாக உள்ள 510 கிலோ கிராம் கற்றாழை தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த கற்றாழை தாவரங்கள் லாரி மூலம் கடத்திகொண்டிருக்கு போது இவ்வாரு கைது செய்யப்பட்டன.

கைது செய்த நபர்கள் மன்னார், புதுகுடிருப்பு பகுதியில் வசிக்கின்ற 39 மற்றும் 36 வயதானவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர். கைது செய்த நபர்கள், கற்றாழை தாவரங்கள் பொதி மற்றும் லாரி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வன்காலே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

சுற்றுச்சூழல் அழிக்கப்படுகின்ற இவ்வாரான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்க கடற்படையினர் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றன.