முத்தூர் கெங்கெய் பாலத்துக்கு கீழிருந்து மேலும் பல ஆயுதங்கள் மீட்பு

முத்தூர் பகுதியில் உள்ள கெங்கெய் பாலத்துக்கு கீழ் 2019 மே மாதம் 18 ஆம் திகதி கடற்படையினரினால் தொடங்கிய நிர்முழ்கி சோதனை நடவடிக்கையின் மூலம் மேலும் பல ஆதங்கள் 2019 மே மாதம் 21 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டன.

கெங்கெய் பாலத்துக்கு கீழ் கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட நிர்முழ்கி நடவடிக்கை மூலம் பல ஆதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 2019 மே மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட நிர்முழ்கி நடவடிக்கை மூலம் மேலும் பல ஆதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு 07 கை குண்டுகள், T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற 7.62 x 39 34 ரவைகளுடன் ஒரு மெகசின், T-56 துப்பாக்கியின் போல்ட் பகுதி மற்றும் ஒரு கை தொலைபேசியுடன் ஒரு சிம் காட் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பிரகாரமாக கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முத்தூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

கிழக்கு கடற்படை கட்டளையின் நீர்முழ்கி பிரிவின் கடற்படையினரினால் முத்தூர் கெங்கெய் பாலத்துக்கு கீழ் மேலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.