பிரான்ஸ் பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

பிரான்ஸ் பிரதிநிதிகளின் குழு இன்று (மே22) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

அதன் பிரகாரமாக பிரஞ்சு, எல்லை பொலிஸ் மனித கடத்தலுக்கு தொடர்பு கொண்டுள்ள சர்வதேச விசாரணைகள் மத்திய அலுவலகம் பிரதானி, கேப்டன் பெட்ரிக் பாயேன் மற்றும் பிரஞ்சு தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் லெஃப்டினென்ட் கமாண்டர் பிலீப் க்ருசன் மெயார் உட்பட பிரான்ஸ் பிரதிநிதிகளின் குழு இன்று கடற்படை தலைமையகத்தில் விஜயமொன்றை மேற்கொன்டுள்ளனர். அங்கு கேப்டன் பெட்ரிக் பாயேன் மற்றும் லெஃப்டினென்ட் கமாண்டர் பிலீப் க்ருசன் மெயார் ஆகியோர் கடற்படை தளபதியை சந்தித்து இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.

அதன் பின் இலங்கை கடற்படை தலைமையகத்தில் அமைந்துள்ள செயல்பாடுகள் அறை பற்றி மற்றும் கடற்படையின் செயல்பாடுகள் பற்றி பிரான்ஸ் பிரதிநிதிகளின் குழுவினரிடம் கடற்படை தளபதி அவர்களினால் கூறப்பட்டன. இன் நிகழ்வுகளுக்காக பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல மற்றும் இயக்குனர் கடற்படை செயல்பாடுகள் கொமடோர் சந்ஜிவ டயஸ் கழந்துகொன்டுள்ளதுடன் மேலும் இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன