இந்து - இலங்கை சர்வதேச கடல்சார் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு

30 வது சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் 2019.மே 24 திகதி இடம்பெற்றது. இவ்வருடாந்த சந்திப்பு காங்கேசன்துறைக்கு அப்பாலுள்ள சர்வதேச கடல் எல்லைப் பிரேதேசத்தில் இலங்கை கடற்படை கப்பல் சயுரலவில் இடம்பெற்றது.

வடக்கு கடற்படை பிரிவுக்கான கட்டளைத் தளபதி ரியர் எட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் வட மத்திய கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் சனத் உத்பல இயக்குனர் கடற்படை செயல்பாடுகள் சன்ஜிவ டயஸ், இந்தியாவில் இலங்கை உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் சுரேஷ் த சில்வா மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் துணைப் பணிப்பாளர் நாயகம் கொமடோர் வய்.எம்.ஜி.பி ஜயதிலக உட்பட பல அதிகாரிகள் கழந்துகொன்டனர். தமிழ் நாடு கடற்படை பிரிவுக்கான கொடி அதிகாரிகளின் கட்டளைத் தளபதி ரியர் எட்மிரல் கே.ஜே அவர்கள் தலைமையில் பல அதிகாரிகள் மற்றும்இலங்கையில் இந்திய உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அஷோக் ராஓ ஆகியோர் இன் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இருநாடுகளுக்கிடையேயான நட்புறவினை பலப்படுத்துவதுடன் கடற்படை மற்றும் கடலோர காவற்படையினரின் நடவடிக்கைகளை தயார்நிலையில் வைத்துக்கொள்வதே இச்சந்திப்பின் நோக்கமாகும்

30 வது தடவையாக இடம்பெற்ற இந்த மாநாட்டில் இந்திய அதிகாரிகளினால் இந்திய பிராந்தியத்தில் ரோந்து நடவடிக்கைகள் மேம்படுத்துதல், சட்டவிரோத நடவடிக்கைகளை குறைத்தல் தொடர்பாக இந்திய அதிகாரிகளினால் இந்திய மீனவர்களுக்கு விழிப்புணர்வு செய்தல்.மேலும், இங்கு பிராந்திய கடல் சார் பாதுகாப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்வின் நினைவாக, இரு கட்சிகளுக்கும் இடையில் நினைவுச்சின்னங்களும் பரிமாற்றப்பட்டன