கஞ்சா 2.35 கிலோ கிராமுடன் இரண்டு நபர்களைக் கடற்படை கைது செய்தது

2019 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி ஹணுகெடியவில் உள்ள ஹுங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 2.35 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு (02) நபர்களை பொலிஸ் அதிரடிப்படையுடன் இணைந்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அதன்படி, தெற்கு கடற்படை கட்டளைத் தளத்தின் கடற்படை வீரர்களுடன் இணைந்து பொலிஸ் அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது வாகனம் ஒன்றினால் இந்த கஞ்சா தொகை கடத்திச் செல்லும் வழியில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் 56 மற்றும் 31 வயதுடைய ஹுங்கம பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாலம் காணப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள், கஞ்சா தொகை மற்றும் வாகனமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹங்கம பொலிஸுக்கு ஒப்படைக்கப்பட்டது.