கடற்படை மற்றும் கடல்சார் அகடமிக்கான புதிய டென்னிஸ் மைதானம்

கடற்படை மற்றும் கடல்சார் அகாடமிக்கு புதிய டென்னிஸ் மைதானமொன்று இன்று (மே 31) கிழக்கு கடற்படைத் தளபதியான ரிய அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதிப் பிரதான கிழக்கு கடற்படைத் தளபதி கொமோடோர் உபுல் டி சில்வா, கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி, கிழக்கு கடற்படை கட்டளையின் தலைவர்கள், மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.