இந்திய கடலோரப் காவல் படையின் ‘சங்கல்ப்’ எனும் கப்பல் காலி துறைமுகத்துக்கு வருகை

இந்திய கடலோரப் காவல் படையின் ‘சங்கல்ப் எனும் கப்பல் இன்று (மே 31) வழங்கள் நடவடிக்கைகளுக்காக காலி துறைமுகத்துக்கு வந்தடைந்தது

கப்பல் காலி துறைமுகத்துக்கு வந்தடைந்த பின் கப்பலின் கட்டளை அதிகாரியான கேப்டன் பிஷாந்ட் ஷர்மா தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போல் அவர்களை சந்தித்துள்ளார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.