194.8 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கண்டுபிடிப்பு

கடற்படையினரால் 2019 ஜூன் 07 ஆம் திகதி பலைதீவு மற்றும் நெடுன்தீவு பகுதிகளில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 194.8 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நெடுன்தீவு குவிந்தவாடி கடற்கரை பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 87.9 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் குறித்த கட்டளைக்கு சொந்தமான பலைதீவு கடற்படை முகாமின் கடற்படையினரினால் பலைதீவு கடற்கரை பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 70.9 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் குறித்த கட்டளையின் கடற்படையினரினால் புலியன்திவில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போதும் 36 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பீடி இலைகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பானம் சுங்க அதிகாரிகளிடம் மற்றும் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

அதன் பிரகாரமாக இம் இந்த மாதத்தில் மட்டும் கடற்படையினரினால் 2300 கிலோகிராமுக்கு மேற்பட்ட பீடி இலைகளுடன் பல கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டன.