115 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கண்டுபிடிப்பு

கடற்படையினரால் இன்று (ஜூன் 09)ஆம் திகதி சிலாவதுர, ஹூனேஸ்நகர் பகுதிகளில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 115 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் பிரகாரமாக வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் சிலாவதுர, ஹுனெஸ்நகர் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது குறித்த பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பீடி இலைகள் காட்டில் மறைத்து இருக்கும் போது இவ்வாரு கண்டுபிடிக்கப்பட்டன. கண்டுபிடிக்கப்பட்டுள்ள பீடி இலைகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவதுர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும் குறித்த கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் 2019 ஜூன் மாதம் 07 ஆம் திகதி இப் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது லொரி வன்டி மூலம் கொண்டு செல்ல முயச்சி செய்த 287.3 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாரான சட்டவிரோத நடவடிக்கைகள் கட்டுபடுத்த கடற்படை நிலையான நடவடிக்கைகள் மேற்கொள்கின்றதுடன் இது மூலம் சட்டவிரோதமாக நாட்டிற்குள் போதை மருந்துகளை கடத்த முயன்ற பெரும் எண்ணிக்கையிலான குற்றச்சாட்டாளர்களை கைது செய்ய முடிந்தது.