இலங்கை பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் நடத்திய ஆங்கில மொழி பாடநெறியின் சான்றிதழ்கள் வழங்கப்படுள்ளன

இலங்கையில் ஆஸ்திரேலிய உயர் ஆணையத்தின் ஆதரவின் கீழ் இலங்கை பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் நடத்திய ஆங்கில மொழி பாடநெறியின் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 2019 ஜுன் மாதம் 11 ஆம் திகதி கொழும்பு கலங்கரை விளக்கம் உணவகத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையர் அதி மேதகு டேவிட் ஹோல்லி அவர்கள் கழந்துகொன்டுள்ளார். கடற்படை தளபதி, வைஸ் அட்மிரல் நன்தன ஜயரத்ன, இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் துணைப் பணிப்பாளர் நாயகம் கொமடோர் வய்.எம்.ஜி.பி ஜயதிலக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மற்றும் நபர்கள் பதிவு செய்தல் திணைக்களத்தின் உயர் அதிகாரிள் உட்பட இலங்கை பிரிட்டிஷ் கவுன்சலின் அதிகாரிகள் இன் நிகழ்வில் கழந்துகொன்டனர்.

குறித்த பாடநெறி கொழும்பு கலங்கரை விளக்கம் உணவகத்தில் இடம்பெற்றதுடன் இதுக்காக இலங்கை கடற்படையின் 05 பேர், இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் 05 பேர், இலங்கை சுங்கத் துறையின் 10 பேர் கழந்துகொன்டனர்.

இலங்கையில் ஆஸ்திரேலிய உயர் ஆணையம் மூலம் இந்த பயிற்சிக்காக நிதி ஆதரித்ததுடன், இலங்கை கடற்படை மூலம் தேவையான கற்பித்தல் உபகரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி 10 வார இறுதிகளில் நடத்தப்பட்டதுடன் இப் பயிற்சி மூலம் உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளும் திறன் வளர்த்தல், ஆங்கில மொழி தேவைகளை நிறைவேற்றுவதற்கு தேவையாகும் போது ஆங்கில மொழி திறமைகளை பயன்படுத்தல் எதிர்பார்கப்படுகின்றது. இந்த பாடநெறிக்கி இணையாக ஆங்கில மொழி பாடநெறியில் கழந்துகொன்ட குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மற்றும் நபர்கள் பதிவு செய்தல் திணைக்களத்தின் 20 அதிகாரிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுள்ளன